மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே வேலை இழந்த மன உலைச்சல் காரணமாக மேட்டுப்பாளையம் நகராட்சி முன்னாள் நகர அமைப்பு திட்டமிடல் ஆய்வாளர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகரமைப்பு திட்டமிடல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அறிவுடை நம்பி என்பவர்.
இவர் இறுதியாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் நகராட்சியில் பணியாற்றி போது அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அறிவுடை நம்பி விசாரணைக்கு பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | 2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!
வேலை போன பிறகு, அறிவுடை நம்பி, தனது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் இரு மகன்களுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் வசித்து வந்தார். பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப் பட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு அறிவுடை நம்பி ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது. மன அழுத்தத்துடன் வேறு சில உடல்நில பிரச்சனைகளும் அவருக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அறிவுடை நம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியராக வேலை பார்க்கும் அறிவுடை நம்பியின் மனைவி, வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் படிக்க | செங்கோலை அகற்ற வேண்டும்... சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!
பின்னர் அது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டது. இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)
மேலும் படிக்க | கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு விடியல் தரப்போரார் ஸ்டாலின்-எச்.ராஜா காட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ