சென்னை வேளச்சேரி, அண்ணா நகர், 4வது விரிவில் உள்ள சிடிஎஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பார்த்திபன்(32). இவருக்கும் பிரியா என்பவருக்கும் ஜூலை 5 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. மென் பொறியாளரான இவர், நேற்று வழக்கம்போல் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது திடீரென காரில் வந்த கும்பல் பார்த்திபனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றது. இதனைப் பார்த்த பார்த்திபனின் தாயார், காரின் குறுக்கே சென்று தடுக்க முயன்றார். அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாத கார், ஆஷாவை இடித்து தள்ளிவிட்டு வேகமாக சென்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து தகவல் அறிந்து பதறிப்போன பார்த்திபனின் மனைவி பிந்து, உடனடியாக வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் கடத்தப்பட்ட பார்த்திபனை மீட்கும் முயற்சியில் இறங்கினர். சிசிடிவிக்களின் அடிப்படையில் காரை காஞ்சிபுரம் அருகே வழிமறித்து காவல்துறையினர் பிடித்தனர். அப்போது தான் பார்த்திபனை கடத்தியது முன்னாள் காதலியான சவுந்தர்யா என்பது தெரியவந்தது.


மேலும் படிக்க | உயர் கல்வி படிக்க செல்லும் தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


சவுந்தர்யாவும், பார்த்திபனும் ராணிப்பேட்டையில் உள்ள கல்லூரியில் படிக்கும்போது நெருங்கிப் பழகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள எண்ணியிருந்த நேரத்தில் பார்த்திபனின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை சவுந்தர்யாவிடம் எடுத்துக் கூறி காதலை கைவிட்டுள்ளார் பார்த்திபன். பின்னர் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருப்பினும் பார்த்திபனை மறக்க முடியாத சவுந்தர்யா, தன்னுடைய தாய் மற்றும் மாமன் மகன், சித்தப்பா ஆகியோருடன் வந்து பார்த்திபனை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளார். 


ஆனால் அதற்கும் காவல்துறையினர் கைது செய்துவிட்டனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் பார்த்திபனை விட்டு பிரிந்து செல்ல சவுந்தர்யா சம்மதம் தெரிவித்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி காவல்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சவுந்தர்யா உள்ளிட்ட 4 பேர் மீது கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


 


மேலும் படிக்க | மக்களுக்கு இன்ப அதிர்ச்சி: சரசரவென சரிந்தது தக்காளியின் விலை! ஒரு கிலோ இவ்வளவு கம்மியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ