டிஎன்பிஎஸ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் இருந்து தமிழ் கட்டாயம் என்பதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் அண்மையில் நடைபெற்றது. இதில் ஏறத்தாழ 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். 5 ஆயிரம் காலிப் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. இதனால், நடந்து முடிந்திருக்கும் குரூப் 2 தேர்வின் கட்ஆஃப் எவ்வளவு இருக்கும் என தேர்வர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு புதிய அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டாய தமிழ் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | குரூப் - 2 தேர்வுக்கான விடை விரைவில் வெளியீடு : டிஎன்பிஎஸ்சி தகவல்
அதாவது டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து அரசு தேர்வுகளில் இருந்தும் கட்டாய தமிழ் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாணையின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும் தொகுதி 1, 2 மற்றும் 2ஏ போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில், முதன்மை எழுத்துத் தேர்வான கட்டாய தமிழ்மொழித்தாள் தகுதி தேர்வு உள்ளது.
இனிவரும் காலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு விலக்கால், அவர்கள் டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தேர்வில் பங்குபெற மாட்டார்கள். டிஎன்பிஎஸ்சி மட்டுமல்ல, மாநில தேர்வு முகமையால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் இந்த அரசாணை பொருந்தும். 40 விழுக்காடுக்கும் குறைவான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த அரசாணை பொருந்தும். இவ்விலக்கினைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் அரசு விதிமுறைப்படி கொடுக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | TNPSCல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - முழு விபரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR