TNPSCல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - முழு விபரம்

டிஎன்பிஎஸ்சியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 21, 2022, 03:52 PM IST
  • டிஎன்பிஎஸ்சியில் வேலை வாய்ப்பு
  • டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு
 TNPSCல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - முழு விபரம் title=

TNPSC ஆணையத்தின் மூலம் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறநிலையத்துறை துணை சேவை அமைப்பில் (TNHRCE Subordinate Service – Code No. 009) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Executive Officer Grade III (Code No. 1654) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

TNPSC அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில் (Advertisement No. 616, Notification No. 12/2022) Executive Officer Grade III (Code No. 1654) பணிக்கு என மொத்தமாக 42 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதி:

Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையத்தில் Arts / Science / Commerce போன்ற பிரிவின் கீழ் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க | மஹிந்திராவின் 2022 Scorpio N SUV புதிய கார் அறிமுக தேதி அறிவிப்பு

வயது வரையறை:

01.07.2022 அன்றைய தினத்தின்படி, Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 25 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

job

 SCs, SC(A)s, STs, MBC / DCs, BCs & Destitute Widows of all Castes ஆகிய வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கிடையாது. அதேசமயம், இவர்களை தவிர மற்ற வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

Executive Officer Grade III பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு Level-10 என்கிற அரசு ஊதிய அளவின்படி குறைந்தது ரூ.20,600 முதல் அதிகபட்சம் ரூ.75,900வரை மாத ஊதியம் வழங்கப்படும். 

மேலும் படிக்க | AFCAT 2 Recruitment 2022: இந்திய விமானப்படையில் பணி புரிவதற்கான அரிய வாய்ப்பு

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு (Written Examination)
சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate verification)
கலந்தாய்வு (Counselling)

பதிவு கட்டணம்:

Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு பதிவு கட்டணமாக (One Time Registration) ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம்:

Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் ரூ 100

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.06.2022

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் விவரம்:

Paper-I தேர்வானது 10.09.2022 (காலை 9.30 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை)

Paper – II தேர்வானது 10.09.2022 (மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை)

விண்ணப்பிக்கும் முறை:

Executive Officer Grade III தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று அதனை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அத்துடன் இணைத்து ஜூன் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News