சர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றுவதற்கான காலஅவகாசம் வரும் 29 ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்க்கரை அட்டையை  அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற விரும்புவோர் நவ.26ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாகவோ, நியாய விலைக்கடைகளிலோ விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரைக்கான ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேசன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும்,  நவம்பர் 26 ஆம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் காமராஜ் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், சர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றுவதற்கான காலஅவகாசத்தை மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற விரும்புவோர் www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ, வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் அலுவலகங்கள் மட்டுமின்றி நியாய விலைக்கடைகள் வாயிலாக வரும் நவ.29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தில் தற்போது 10,19,491 சர்க்கரை அட்டைதாரர்கள் உள்ளதாகவும்,  சர்க்கரை அட்டையை  அரிசி அட்டையாக மாற்ற நவ.29 ஆம் தேதிக்கு பிறகு கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.