பாஜக பிரமுகர் காருக்கு தீ வைக்கப்பட்டதா? போலீஸ் அதிரடி
சென்னை அருகே மதுரவாயலில் கார் தீப்பற்றி எரிந்த புகாரில் உரிமையாளர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் சதீஸ்குமார் பா.ஜ.கவில் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ளார். அவருடைய கார் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தகவல் பா.ஜ.க வட்டாத்தில் தீயாக பரவியது. பா.ஜ.க நிர்வாகியின் காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததாக செய்திகள் பறந்தன.
அண்மையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது சென்னை கோயம்பேடு பகுதியில் விசிக மற்றும் பா.ஜ.கவினர் மோதிக் கொண்டதால், இதன் பின்னணியில் கார் கொளுத்தப்பட்டதாகவும் செய்திகள் பரப்பப்பட்டது. மேலும், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இது உடனடியாக காவல்துறையினரின் கவனத்துக்கும் சென்றது.
உடனடியாக கோயம்பேடு சரக உதவி ஆணையாளர் ரமேஷ் பாபு விசாரணைக்கு உத்தரவிட்டதன்பேரில் மதுரவாயல் உதவி ஆய்வாளர் சுதாகர் சம்பவ இடத்துக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தினார். அவர் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தார். அதில் காரின் உரிமையாளர் சதீஸ்குமாரே தன்னுடைய காருக்கு தீ வைத்து எரித்தது பதிவாகியிருந்தது. இதுகுறித்து சதீஸ்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் மன உளைச்சல் காரணமாக காருக்கு தீ வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். நகை வாங்கித் தருமாறு மனைவி தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால், மன உளைச்சலில் காருக்கு தீ வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜாமீனில் சதீஸ்குமாரை விடுவித்தனர்.
மேலும் படிக்க | ஹோட்டல் மேலாளரை கொடூரமாக தாக்கும் ரவுடிகள் - பதறவைக்கும் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR