Karur: கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தி சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதி உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு மார்ச் 20 உலக சிட்டுக் குருவிகள் தினம் மற்றும் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பறவை இனங்களை காக்கவும், நீர் நிலைகளை அதிகரிக்கவும் ரக்சனா சமூக சேவை அமைப்பின் மூலம், ரக்சனா என்ற பள்ளி மாணவியின் தந்தை ரவீந்தரன், தாய் சங்கீதா, பள்ளி மாணவனான இரண்டாவது மகன் விஷ்வக் நித்தின் குடும்பத்தினர், பறவைகள் தண்ணீர் குடிக்க இலவசமாக தண்ணீர் தொட்டிகளையும், தோட்டங்கள் மற்றும் காடுகளில் 5 அடி மற்றும் 10 அடி அகலம் கொண்ட சிறிய கான்கிரீட் குளங்களை இலவசமாக கட்டி கொடுக்கின்றனர்.



சிறிய தண்ணீர் தொட்டியின் மூலம் தண்ணீர் ஊற்றி பறவைகளுக்கு வீடுகளிலும், தோட்டங்களிலும், காடுகளிலும் தண்ணீர் வைக்கும் பொழுது தினந்தோறும் 10 முதல் 50 பறவைகள் வரை வந்து தண்ணீர் குடிக்க வாய்ப்புள்ளது. 5 அடி, 10 அடி கான்கிரீட் குளங்கள் மூலம் அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளும், கோழிகளும் மற்றும் முயல் அணில்களும் பறவை இணங்கள் மைனா, சிட்டுக்குருவி, கொக்கு, நாரை இது போன்ற அனைத்தும் தண்ணீர் குடிக்க வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்! மகளிர் உரிமைத்தொகை உயர்வு..வேறு என்ன?


இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றை தடுக்கும் பொருட்டு, பறவை இனங்கள் அழியாமல் தடுக்க வேண்டும். எனவே, இன்று உலக தண்ணீர் தினத்தன்று பறவைகளை காக்க தண்ணீர் தொட்டிகளையும், 5 அடி, 10 அடி கான்கிரீட் குளங்களைவும் இலவசமாக தருகிறோம் என ரவீந்தரன் தெரிவித்தார். 



தேர்வு சமயம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்காத இவர்களது மகளான பள்ளி மாணவி ரக்சனா சிறுவயதில் இருந்தே, நாட்டு விதைகளை இலவசமாக வழங்குவது, யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும், லட்சக்கணக்கான விதைப்பந்துகளை நாடு முழுவதும் சென்று, ஒவ்வொரு மாநிலத்திலும் வீசி விழிப்புணர்வு ஏற்படுத்தி, உலக சாதனை உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா.. ஈரோடு மாவட்டத்திற்கு மார்ச் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ