கோயில் பணியாளர்களுக்கான குடும்பநல நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிரந்தர கோயில் பணியாளர்களின் குடும்பநல நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்களுக்கான குடும்பநல நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; கோவிலில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள், பணியின் போது உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியானது ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். 


மேலும், நிரந்தர கோவில் பணியாளர்களுக்கான மாத சந்தாவும் ரூ. 15 லிருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.