பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார்..! என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரண்
கள்ளத் துப்பாக்கி வைத்து ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டிய வழக்கில் ஆறு மாதம் தேடியும் பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார். என்கவுண்டருக்கு பயந்து நடுவீரப்பட்டை சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொலை குற்றங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையை போக்க போலீசார் பிரபல ரவுடிகளை கண்காணித்தும் தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் நடுவரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏ ப்ளஸ் ரவுடியான லெனின், இதற்கு முன் பிரபல ரவுடியாக வலம் வரும் நெடுங்குன்றம் சூர்யாவின் கூலிப்படையில் முதன்மையானவராக இருந்தவர். பின்னர் சூர்யாவிற்கும் லெனினுக்கும் தொழில் போட்டி ஏற்பட்டு லெனின் அவரிடமிருந்து பிரிந்து வந்து அவருக்கு எதிர் கூட்டணியானார்.
சூர்யா பாஜகவில் கட்சியில் இணைந்து திரிந்து வாழப் போவதாக போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து லெனில் சூர்யாவின் இடத்தைப் பிடிக்க தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது போலி பத்திரங்கள் தயார் செய்து இடங்களை அபகரிப்பது என பல்வேறு குற்ற சம்பவங்களில் அசுர வேகத்தில் பயணிக்கத் தொடங்கினார். மேலும் இவர் மீது கொலை, கொலை முயற்சி ஆள் கடத்தல் வழிப்பறி, சட்டவிரோத துப்பாக்கி பயன்படுத்துதல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் பல குற்ற வழக்குகளில் தேடப்படும் தலை மறைவு குற்றவாளியாகவும் இருந்து வருகிறார். இப்படி தலைமறைவாக இருந்து கொண்டு பல குற்ற சம்பவங்களை செய்வதற்காக திட்டம் தீட்டப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதைத் தொடர்ந்து ஏ ப்ளஸ் ரவுடியான லெனினை பிடிப்பதற்காக சோமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி அந்த போதிலும் போலீசார் வட்டாரத்தில் தனக்கு வேண்டியவர்கள் மூலம் தகவல்கள் அறிந்து கொண்டு போலீசார் வருவதற்கு முன் லெனின் அவ்விடத்தை விட்டு செல்வது வாடிக்கையாக இருந்தது. லெனினை பிடிக்க கடந்த ஆறு மாதங்களாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் லெனினை நெருங்கியும் போலீசார் பிடிக்க முடியாமல் போனது.
இது ரவுடி லெனின் சாமர்த்தியமா அல்லது போலீசாரின் இயலாமையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியனர். தன்னைப் பிடித்தால் போலீசார் என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ரவுடி லெனின் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.4ல் சரணடைந்தார். அப்போது காவல்துறையே தன் மீது பொய் வழக்குகளை போட்டு என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு வருவதாக லெனின் நீதிபதியிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி லெனினை ஆறு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ