தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... தீபாவளிக்கு கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் - முழு விவரம்!

TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 8, 2023, 08:10 PM IST
  • தீபாவளி வரும் நவ. 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • நவ. 13ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
  • பல பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... தீபாவளிக்கு கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் - முழு விவரம்! title=

TN Diwali Extra Trains: சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு வேலைக்கோ, படிப்பிற்கோ வந்திருப்பவர்கள் தீபாவளி பண்டிகைக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். விமானம், பேருந்து, ரயில் என பல பொது போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் ரயில் என்பதே நடுத்தர வர்க்கத்தினரின் சிறந்த ஆப்ஷனாக இருக்கும். 

இதில், தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டகங்களை (TN South Districts) சேர்ந்தோர் சென்னையில் இருந்து அதிகம் பயணிப்பார்கள். அந்த மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெரியளவில் இல்லாத நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் சென்னையில்தான் வேலையில் இருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் இளைஞர்களும் தென் மாவட்டத்தினர் சென்னையில் இருக்கின்றனர். அந்த சூழலில், மற்ற மாவட்டங்களுக்கு பேருந்து, ரயில் ஆகியவற்றில் இருக்கும் நெருக்கடியை விட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பேருந்துகளிலேயே அதிக கூட்டம் இருக்கும்.

தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்

ஏனென்றால், குமரி, திருநெல்வேலி (Tirunelveli), தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மக்களும் பயணம் செய்வார்கள். இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் எப்போதும் நெருக்கடியில்தான் செல்ல நேரிடும். எனவே, பண்டிகை காலங்களில் பேருந்துகளும், ரயில்களும் தென் மாவட்டங்களுக்கு அதிகம் விட வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கும். மாநில அரசும், தென்னக ரயில்வேயும் (Southern Railways) அதற்கேற்பவாறு அரசு பேருந்துகளையும், ரயில்களையும் இயக்கும். 

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. ரயில்வே வெளியீட்ட புதிய அறிவிப்பு

தீபாவளி வரும் நவ. 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பலரும் நவ. 9ஆம் தேதியில் இருந்தே தங்களின் பயணத்தை திட்டமிட்டிருப்பார்கள். அதற்கான வாய்ப்பில்லாதவர்கள் நவ. 11ஆம் தேதி இரவில் கூட பயணிக்க திட்டமிட்டிருப்பார்கள். அதுமட்டுமின்றி, மீண்டும் ஊர்களுக்கு திரும்பவர்களுக்கு நவ. 13ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதில், அனைத்தும் பேருந்துகளும், ரயில்களும் முன்பதிவு செய்யப்படாமல் அனைத்து தரப்பு மக்களும் செல்லும் வகையில் முன்பதிவில்லா பேருந்து/ரயிலும் இயக்கப்படும். 

அந்த வகையில், சென்னையில் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடிக்கு ஒரு கூடுதல் சிறப்பு ரயில் (Special Train) இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, நவ. 10ஆம் தேதி முதல் நவ. 13ஆம் தேதி சென்னை - தூத்துக்குடி வரை செல்லும் ரயிலின் அட்டவணையை இன்று அறிவித்துள்ளது.

எத்தனை பெட்டிகள்?

சென்னை - தூத்துக்குடி செல்லும் ரயில் எண் 06001 மற்றும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - சென்னை செல்லும் ரயில் எண் 06002 என சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளன. அதில் ஒரு 2ஆம் அடுக்கு ஏசி பெட்டி, ஒரு 3ஆம் அடுக்கு ஏசி பெட்டி, ஒரு 3ஆம் அடுக்கு ஏசி எகானமி பெட்டி, 10 ஸ்லீப்பர் பெட்டி, 5 பொதுப்பெட்டி ஆகியவை இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். இதில் பொதுப்பெட்டிகளை தவிற மற்ற பெட்டிகளுக்கு முன்பதிவு இருக்கும். 

எந்தெந்த ஊர்களில் நிற்கும்?

சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி (Chennai Egmore To Thoothukudi) செல்லும் ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

நேர அட்டவணை

இதில் நவ. 10ஆம் தேதியும் (வெள்ளி), நவ. 12ஆம் தேதியும் (ஞாயிறு) சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் முறையே அடுத்த நாளான நவ. 11 (சனி), நவ. 13ஆம் தேதி (திங்கள்) மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும். மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து நவ.11, நவ. 13ஆம் தேதிகளில் மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு முறையே அடுத்த நாள் (நவ. 12, நவ. 14) காலையில் சென்றடையும். 

மேலும் படிக்க | ரயில்வே மாஸ் டூர் பேக்கேஜ்.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், உடனே படிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News