திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யதல், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுதல், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/ வழங்குதல் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும், மேகத்தாதுவில் அணைக்கட்ட கூடாது எனவும் 2014, 2019ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு மோடி நிறைவேற்றாததை கண்டித்தும் போராடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகள் டெல்லி சென்று போராட்ட நடத்த விடாமல், உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை (PM Narendra Modi) எதிர்த்து போட்டியிட கூடாது என்று ரயில் பயணம் செய்ய கூடாது என்பதற்காக உறுதியான ரயில்வே பயணசீட்டை ரத்து செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
பயணம் செல்ல விடாமல் காவல்துறையை வைத்து கைது செய்வது கண்டிக்கத்தக்கது எனக் கூறிய அவர்கள், 2000கிலோமீட்டர் தொலைவில் இருந்து பிரதமர் மோடி வாரணாசி வந்து போட்டியிடலாம், 2000கிலோமீட்டர் தொலைவில் இருந்து ராகுல்காந்தி கேரளாவில் வந்து போட்டியிடலாம் ஆனால், தமிழக விவசாயிகள் வாரணாசி சென்று போட்டியிட்டால் விளம்பரதிற்காக என்று உச்ச நீதிமன்றம் கூறுவது எந்த வகையில் நியாயம்? என வினவினர்.
மேலும் படிக்க | விவசாயிகள், தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்!
விவசாயிகளுக்கு உரிய நியாயம் வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் உள்ள டவரில் ஏறி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ