விவசாயிகள், தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்!

தளபதி விஜய்யின் அறிவுறுத்தலின் படி, தமிழகம் முழுவதும் இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 28, 2024, 10:26 AM IST
  • இன்று உலக பட்டினி தினம்.
  • விஜய்யின் கட்சி சார்பாக அன்னதானம்.
  • கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
விவசாயிகள், தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்! title=

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அசத்தி உள்ளனர் தமிழக வெற்றி கழகத்தினர். கோவையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, ஒரு வேளை உணவு சேவை என்ற திட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அன்னதானம் வழங்கினர். தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை தீவிரபடுத்தி வருகிறார். பல்வேறு நலத்திட்டங்களை வழங்க அறிவுறுத்தி வரும் அவர், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒருவேளை மதிய உணவு வழங்க வேண்டி  தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டிருந்தார்.

மேலும் படிக்க | கேரள அரசு புதிய அணை கட்ட கூடாது - தமிழக விவசாயிகள்

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் வெளியான கடிதத்தில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்து இருந்தார். 

அதன் படி, கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள உழவர் சந்தை பகுதியில், தமிழக வெற்றி கழகம், கோவை தெற்கு  மாவட்ட இளைஞரணியினர், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தை தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், காய்கறி வியாபாரிகள், ஓட்டுனர்கள் என ஏராளமானோர் பெற்று சென்றனர். இதே போல, கோவை பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போத்தனூர், வெள்ளலூர், ஏலூர், மதுக்கரை மார்க்கெட், பொள்ளாச்சி, கிணத்துகடவு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினரும் உணவு வழங்கி வருவது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மே 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News