கோவை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம்!
கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மாணவியின் பள்ளி தோழர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை : கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மாணவியின் பள்ளி தோழர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்னர் தன் பெற்றோர்களிடம் இந்த பள்ளியில் படிக்க விருப்பமில்லை என்றும் வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார். அதனையடுத்து சில நாட்களாக இந்த மாணவி மனஅழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.
ALSO READ கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம்
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று மாலை நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவி அறையில் உள்ள மின்விசிறியில் யாரும் எதிர்பாராத விதமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மாணவியின் சடலத்தைக் கண்டு பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் பல கோணத்தில் விசாரணையை தொடங்கினார் அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் மாணவிக்கு சின்ம்யா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. அதனையடுத்து அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் . அதனைத் தொடர்ந்து மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் போலீசார் வசம் கிடைத்தது அதில்,"யாரையும் சும்மாவிடக்கூடாது" என்று அந்த மாணவி எழுதி இருந்தார்கள். மேலும் ரித்துவின் தாத்தா, எலிசா சாருவுன் தந்தை மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியரையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் இந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரை மட்டும் கைது செய்துள்ள நிலையில் மற்றவர்களை இன்னும் கைது செய்யவில்லை போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என்று கூறி இறந்த மாணவியின் பள்ளியில் பயின்ற நண்பர்கள் இன்று கோவை அரசு மருத்துவமனை முன்பு பல பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தால் அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இறந்த மாணவி வீட்டின் முன்பும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவி வீட்டின் முன்பும் அரசு மருத்துவமனை முன்பு பல போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் மாணவி வீட்டின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே போராட்டகளமாக மாறியுள்ளது.
ALSO READ கோவை மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR