தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்து 431 அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 48 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்குப் பாடம் நடத்த 2.30 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ஆசிரியரின் வழிகாட்டுதலின்றி பாடம் படிக்க முடியாமல் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். காலிப் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்படாததால் இச்சிக்கல் தொடர்ந்து நீடிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்தும் இதே கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளார். 



இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 


''அரசுப் பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய காலிப் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.  இட ஒதுக்கீடு முறையைச் சரியாகப் பின்பற்றி, டெட் மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு முன் வர வேண்டும். மேலும் 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிட வேண்டும். தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும்.  மேலும் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆகக் குறைக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனத் தேர்வு என்ற அரசாணை 149-ஐ நீக்கம் செய்துவிட்டு, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள 117-வது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்''. 


இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | ஆசிரியர்களின் கூடுதல் பணிச்சுமையை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR