தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடி!
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!
தமிழகத்தில், 2021 சட்டப்பேரவை தேர்தலை (TN Assembly Election 2021) முன்னிட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் (Final voters list) வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல், முகவரி (Address) மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர், டிசம்பரில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதற்காக, நேரடியாகவும், ஆன்லைன் (Online) மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இவற்றை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கியது.
தற்போது, பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு (Satyaprada Saku).
ALSO READ | சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே EPS டெல்லி பயணம்!!
அதன் படி., தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 (6,26,74,446) ஆகும். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்திலேயே சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், துறைமுகம் தொகுதி குறைந்தபட்ச வாக்காளர்களைக் கொண்டதாகவும் உள்ளது. அதன்படி, 6,94,845 வாக்காளர்கள் சோழிங்கநல்லூர் தொகுதியிலும், துறைமுகத்தில் 1,76,272 வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR