இனி மாஸ்க் அணியாமல் இருந்தால் அபராதம்- கோவை ஆட்சியர்

கோவையில் மாஸ்க் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபாரதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.c
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், இரண்டு அலைகளாக பரவியதால் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்திக்க நேர்ந்தது. கடந்த ஆண்டு இறுதியில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு கிடைத்த ஆயுதமாக மாறியிருக்கிறது. இதனையடுத்து இந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது.
இதனிடையே ஓமிக்ரான் (Omicron) என்ற புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வேரியண்ட் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கூட புதிய வேரியண்ட் ஆபத்தை ஏற்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்ததாத குழந்தைகளை எந்த அளவுக்கு ஓமிக்ரான் வேரியண்ட் பாதிக்கும் என்பது மேலும் அச்சத்தை தருவதாக உள்ளது.
ALSO READ | Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்
இதற்கிடையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சிங்காநல்லூர் சுற்றுப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை வீடு வீடாகச் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பை குறைத்துள்ளோம், ஒமைக்ரான் வைரஸ் புதிதாக வந்துள்ளது. இருப்பினும் அந்த தொற்று நம் நாட்டில் இன்னும் கண்டறியப்படவில்லை.
கோவை விமான நிலையத்தில் வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் (RT-PCR Test) பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் பயணிகள் வெளியே அனுப்பப்படுகிறார்கள். மாஸ்க் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபாரதம் விதிக்க திட்டமிட்டுள்ளோம்.
தினமும் சுமார் 9 ஆயிரம் கொரோனா (Coronavirus) சோதனை செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட எல்லையான வாளையார் பகுதியில் மீண்டும் முகாம் அமைத்து கண்கணிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ALSO READ | Omicron: பெங்களூரு வந்த 2 தென்னாபிரிக்க பயணிகளுக்கு கொரோனா! அது ஒமிக்ரானா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR