கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் வசித்துவந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ஜோதி லிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரது ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.


இந்த நிலையில் இன்று காலை விஜயலட்சுமி வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து தீயை அணைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் ஒரு பொண்ணும் அவரது தாயும், படுக்கை அறையில் மற்றொரு பெண்ணும் இறந்து கிடந்துள்ளனர்.


மேலும் படிக்க | இந்த மாவட்டத்தில்தான் பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் - ரிப்போர்ட்


இது குறித்து தீயணைப்புதுறையினர் கூறும்போது, ‘வீட்டின் ஹாலில் இருந்த யூபி எஸ் சில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதை அணைக்க அஞ்சலி மற்றும் அவரது தாய் ஆகியோர் முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் புகையால் மூச்சு தினறல் ஏற்பட்டு  சமையல் அறையில் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.


அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மூச்சு தினறல் ஏற்பட்டு அவரும் அங்கேயே உயிரிழந்துள்ளார்.’ என்றனர்.


தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


தொடர்ந்து தடய அறிவியல் துறையினரை வரவழைத்து ஆய்வு செய்துவருகின்றனர். இந்த விபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திற்னல் ஏற்பட்டு பலியாகியுள்ளது.


தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி: அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள், உருக வைக்கும் ஆட்டோ ஓட்டுநர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR