இந்த மாவட்டத்தில்தான் பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் - ரிப்போர்ட்

எந்த மாவட்டத்தில் மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள்?! அதிகம் புகை பிடிக்கிறார்கள்!? : Detailed Report

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Mar 15, 2022, 12:28 PM IST
  • 25%க்கும் அதிகமான ஆண்கள் மது குடிக்கிறார்கள்
  • 5% பெண்கள் தமிழகத்தில் புகை பிடிக்கிறார்கள்
  • 2019 முதல் 2021 வரையிலான ஆய்வு
இந்த மாவட்டத்தில்தான் பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் - ரிப்போர்ட் title=

இந்தியா முழுவதும் மாவட்ட வாரியாக மது குடிப்பவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையை தேசிய குடும்ப சுகாதார கருத்துக் கணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கணேஷ் பாபு என்பவர் ட்விட்டரில் வரைபடமாக வெளியிட்டுள்ளார். அதன்படி அதிக மதுகுடிக்கும் ஆண்களை கொண்ட மாவட்டம் என்ற பட்டியலில் விழுப்புரம் முதலிடத்தில் இருக்கிறது. இங்குதான் 35 சதவீதத்துக்கும் அதிகமான ஆண்கள் மது குடிக்கிறார்கள். குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 15 சதவீதத்துக்கு குறைவான ஆண்கள் மட்டுமே மது அருந்துகிறார்கள். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 25.4 சதவீத ஆண்கள் மது அருந்துகிறார்கள்.

Alcohol Data Men

மேலும் படிக்க | டாஸ்மாக் தருவது மதுவா? விஷமா? மதுப்பிரியர்களை சுரண்டும் தமிழக அரசு!

அதேபோல ஈரோடு, தர்மபுரி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மாவட்ட ஆண்கள் அதிகம் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் 16 சதவீதத்துக்கும் குறைவான ஆண்களே புகை பிடிக்கின்றனர். தமிழ்நாட்டில் 20.1 சதவீத ஆண்கள் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

Tobacco Habit Men

மேலும் படிக்க | "தம் அடிச்சாதான் ஒரு கிக்கே" இளைஞர்களை ஆட்கொண்டுள்ள புகையிலை பழக்கம்..!

மற்றொருபுறம் மதுகுடிக்கும் மற்றும் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் வெளியாகியுள்ளது. இதில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக பெண்கள் மது அருந்துகிறார்கள். திருவள்ளூர், அரியலூர், நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் 0.1 சதவீதத்துக்கும் குறைவான பெண்களே ம்து குடிக்கிறார்கள்.

Alcohol Consumption Women

மேலும் படிக்க | Alcohol: மதுபானத்துடன் இந்த “5” பொருட்களை சாப்பிடவே கூடாது..!!!

ஈரோடு, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிக பெண்களும் தென் தமிழகத்தில் குறைந்த அளவிலான பெண்களும் புகை பிடிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 4.9 சதவீத பெண்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

Alcohol Data Women

மேலும் படிக்க | அதிகரிக்கிறது புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News