சாலை விபத்துகள் மூலம் நாள் ஒன்றுக்கு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். பலர் கை, கால் என உடலில் கடுமையான காயங்களையும், உடல் உறுப்பு இழப்புகளையும் எதிர்கொள்கின்றனர். இந்த விபத்துகளில் பல கவனக்குறைவினால் ஏற்பட்டாலும், அவற்றில் சில விதிவிலக்குகளும் உண்டு. எதிர்பாராத தருணத்தில் அவர்கள் செய்யாத தவறுக்காக விபத்தை எதிர்கொண்டவர்கள் ஏராளம்.
ALSO READ | இது ரவுடி பேபி காலம்! டிரெண்டை மாற்றிய மணமகள் ஊர்வலம்!
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் நிலையில்லாமல் யாரோ ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிடுவார். அந்த விபத்தை சந்தித்தவருக்கு இதில் இந்த பங்கும் இருக்காது. ஆனால், துருதிஷ்டவஷமாக விபத்தை எதிர்கொண்டிருப்பார். இப்படியான விதி விலக்கு விபத்து ஒன்று வெளிநாட்டில் ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் காரில் இருந்த இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர்.
ALSO READ | கோத்தகிரி அருகே இரண்டு குட்டியுடன் சாலையில் கரடி உலா; பதற்றத்தில் மக்கள்!
இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில் சிக்னல் ஒன்றில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர் நின்று கொண்டிருக்கிறார். அவர் நிற்பதற்கும் அருகாமையில் காஸ்டிலி கார் ஒன்று வந்து நிற்கிறது. அதில் இளைஞர்கள் இருக்கிறார்கள். அப்போது காரின் அடியில் திடீரென தீப்பிடிக்கிறது. இது காரில் இருக்கும் இளைஞர்களுக்கு தெரியவில்லை. வெளியில் இருக்கும் இருசக்கர ஓட்டுநர், அந்த இளைஞர்களை எச்சரிக்கிறார். அப்போது காரை வேகமாக ஓட்டிச் செல்லும் அந்த இளைஞர்கள், ஒரு இடத்தில் காரை நிறுத்தி வெளியேறுகின்றனர். பின்னர் அந்தக் கார் மளமளவென தீப்பிடித்து எரிகிறது. இதனை பைக்கில் சென்ற நபர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
— Interesting Channel (@InteresChannel) February 1, 2022
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR