சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-வது டவர் பிளாக்கின் பின்புறம் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் இன்று காலை சுமார் 11 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனைத் தொடர்ந்து, 4 தீயணைப்பு வாகனங்களும், குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Tamil Nadu Temple Chariot: தேரில் மின்சாரம் பாய்ந்து 12 பேர் பலி! தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி


தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதோடு சிலிண்டர்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். 



அறுவை சிகிச்சை அறையில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மின் கசிவு காரணமாக தீ விபத்து  நேரிட்டதாக இருவேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.


தீ விபத்து நடைபெற்ற கட்டடத்தில் இருந்து 32 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.


மேலும் படிக்க | அரசு விடுதிகளில் முறைகேடுகளில் ஈடுபடும் விடுதி காப்பாளர்கள் - அதிர்ச்சி தகவல்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR