நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள 'அசுரன்' திரைப்படத்தின் Firstlook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘அசுரன்’. இத்திரைப்படத்தின் Firstlook போஸ்டர் இன்று மாலை வெளியானது. 


‘வடசென்னை’ திரைப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி அமைத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், இப்படத்திற்கு அசுரன் என பெயரிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில் இப்படத்தின் Firstlook போஸ்டரினை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.


கலைப்புலி எஸ்.தாணுவின் ‘theVcreations’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.