வடமேற்கு வங்க கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவிக்கையில்...
"தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனவே வடமேற்கு வங்க கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், வங்கக்கடல் மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, தேனியின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை மாலையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது". என தெரிவித்துள்ளார்.