கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணிநேரத்தில் 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக அவர் கூறினார். மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீட்டரும்,குன்னூரில் 13 செ.மீட்டரும்,மதுராந்தகத்தில் 10 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக அவர் கூறினார்.


தென்மேற்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறும் என்று அவர் குறிப்பிட்டார். இதனால் கிழக்கு கடலில் உள்ள காற்று இழுக்கப்படுவதால் நிலவும் வளி மண்டல சுழற்சியாலும், தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையாலும் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைத்து வருவதாக அவர் கூறினார். 


அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று பாலசந்திரன் குறிப்பிட்டார். இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.


நேற்றிரவு முதல் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். இதே போல் சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கடலூர் மாவட்டத்தில் வடலூர், சிதம்பரம் மற்றும் கடலூர் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.