அந்தமானில் புயல் அபாயம்; சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் ரத்து!
அந்தமனில் புயல் அபாயத்தால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால், சென்னை விமானநிலையத்தில் அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பையடுத்து சுற்றுலா பயணிகள் பலா் தங்களுடைய பயண தேதிகளை மாற்றி அமைத்தனா்.
அந்தமானில் புயல் அபாயத்தால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால், சென்னை விமானநிலையத்தில் அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பையடுத்து சுற்றுலா பயணிகள் பலா் தங்களுடைய பயண தேதிகளை மாற்றி அமைத்தனா். இதையடுத்து அந்தமானுக்கு பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால்,சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்தமான், நிக்கோபர் தீவுகளின் அருகே வங்கக் கடலில் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது.அது புயலாக உருவாகி,அந்தமான், நிக்கோபா் பகுதிகளை தாக்கும் ஆபத்து உள்ளது.இதையடுத்து அந்தமான்,நிக்கோபா் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் நேற்று 19 ஆம் தேதியிலிருந்து வரும் 22 ஆம் தேதி செவ்வாய் கிழமை வரை மூடப்பட்டுள்ளன.எனவே அந்தமான்,நிக்கோபாா் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் இந்த நாட்களில் வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உலக சிட்டுக்குருவி தினம் - கேக் வெட்டி கொண்டாடிய குருவி குடும்பம்..!
இதையடுத்து சென்னை விமானநிலையத்திலிருந்து அந்தமானுக்கு தினமும் 9 பயணிகள் விமானங்கள் செல்கின்றன. அந்த 9 விமானங்களில் 1,500 க்கும் மேற்பட்ட பயணிகள் செல்கின்றனா். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் சுற்றுலா பயணிகளாக செல்பவா்கள்.
இதையடுத்து சென்னையிலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், அங்கு அவதிப்பட கூடாது என்பதற்காக சென்னை விமான நிலைய அதிகாரிகள் புயல் எச்சரிக்கை அந்தமானில் சுற்றுலா தளங்கள் 22 ஆம் தேதி வரை மூடப்பட்டு இருப்பது பற்றி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதோடு சுற்றுலாவுக்காக அந்தமான் செல்லும் பயணிகள் தங்களுடைய பயணிகளை வரும் 22 ஆம் தேதி வரை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தினா். மேலும் அந்தந்த விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் இந்த தேதிகளில் டிக்கெட்கள் முன்பதிவு செய்த பயணிகளுகளுக்கு செல்போன்களில், புயல் எச்சரிக்கை பற்றிய குறுந்தகவலையும் அனுப்பினா்.
மேலும் படிக்க | காஞ்சிபுரம் அருகே 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு
இதனால் அந்தமான் சுற்றுலா பயணிகள் பலர் இந்த அறிவிப்புகளை பார்த்துவிட்டு தங்களுடைய பயணங்களை ரத்து செய்வது அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுவது போன்றவைகளில் ஈடுப்பட்டனா்.
இதனால் சென்னையிலிருந்து அந்தமான் செல்லவிருந்த விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.இதையடுத்து சென்னை விமானநிலையத்திலிருந்து இன்று காலை 4.35 மணி,7.10 மணி,8.30 மணி,8.45 மணி, 10.45 மணி ஆகிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்களில் டிக்கெட்கள் முன்பதிவு செய்திருந்த மிகக் குறைந்த பயணிகள், அந்தமான் சென்ற மற்ற 4 விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனா்.
மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR