தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டிய நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!
வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டிய நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!
வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியினை எட்டியுள்ளள நிலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்களை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவின் ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரின் அளவு தமிழகத்தின் அணைகளை நிரப்பி வருகின்றது.
இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1.44 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மைசூரு மாவட்டத்தின் கபினி அணைக்கு விநாடிக்கு 82,230 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 80,375 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 2.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காவிரி மற்றும் கபினி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நஞ்சன்கூடு, பிருந்தாவன தோட்டம், ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம், ஸ்ரீரங்கப்பட்டணம், சங்கமா உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.