தமிழகம் முழுவதும் நடைபெறும் வன விலங்குகள் வேட்டை, வனக் குற்றங்கள் தடுப்பு குறித்து ஏராளமான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அதை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையிலான அமர்வு  விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, இது குறித்து வனத்துறை மற்றும் ரயில்வே தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள், அந்த அறிக்கைகளில் தடுப்புச்சுவர் கட்டுமானம் அகற்றப்பட்டது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும், கண்காணிப்பு கோபுரம், சூரிய ஒளி வேலிகள், சுரங்கவழி பாதை ஆகியவை குறித்து முழுமையான தகவல்கள் இல்லை என சுட்டிக்காட்டினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எங்களை பார்த்தாலே முகம் சுளிக்கிறார்கள்..!


மேலும், இது தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்த அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, தமிழக அரசு தரப்பில் தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜை தலைவராகவும், காவல்துறை ஐ.ஜி. முருகன், வருவாய் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், உதவி தலைமை முதன்மை வனப்பாதுகாவலரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும், வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்க இருப்பதாக தெரிவித்த தமிழக அரசு தரப்பு, அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதி மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையில் கொடைக்கானல், ஆனைமலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நீரஜ் குமார் சேகர் ஆஜராகி காட்டுத்தீ 24 மணி நேரத்தில் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், மனிதர்களோ, வனவிலங்குகளோ பலியாகவில்லை எனவும்  விளக்கமளித்தார்.


மேலும் படிக்க | மக்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாறி வரும் வட சென்னை..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR