COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

11:40 | 05-12-2018


மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியினர் உறுதிமொழி ஏற்பு....



05-12-2018


பேரணி முடிவடைந்த நிலையல், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுகவினர் அனைவரும் மரியாதை செலுத்தினர்! 



ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம்: EPS, OPS மற்றும் அதிமுகவினர் தொண்டர்கள் அமைதி பேரணி! 


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர், 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு உயிரிலாந்தார். 


இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர்.


அதன்படி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த பேரணியானது நடைபெறுகிறது. இதில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். மேலும், அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டுள்ளனர். 


இந்த பேரணி முடிவடைந்தவுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அனைவரும் மரியாதை செலுத்தி விட்டு உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.