சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்த மணி என்பவரிடம், அரசு வேலை வாங்கி தருவதற்காக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் 17 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியிடம் (Edapadi Palaniswamy) உதவியாளராக மணி சில ஆண்டுகளாக இருந்துவந்ததை நம்பி பணம் கொடுக்கப்பட்ட நிலையில், வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தை மோசடி செய்துவிட்டதாக சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையிடம் தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். மேலும் மணிக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | திருப்பூர் அருகே தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!


தமிழ்ச்செல்வன் தவிர்த்து மேலும் சிலரும் உதவியாளர் மணி மீது போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இதுதொடர்பாக மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து,தலைமறைவாக இருந்த மணியை  சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Chennai high Court) மணி ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுவில் தன் மீதான புகார் பொய் என்றும், தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், தனக்கு நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். 



இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் மோசடி  செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, எடப்பாடி முன்னாள் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


ALSO READ | திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR