ஓட்டப்பிடாரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
Former CM J Jayalalithaa Birthday Celebrations: புளியம்பட்டி பதுவா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அதிமுக ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் தலைமையில் அதிமுகவினர் மதிய உணவு வழங்கினர்.
Former CM J Jayalalithaa Birthday Celebrations: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் .
தொடர்ந்து புளியம்பட்டி பதுவா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அதிமுக ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் தலைமையில் அதிமுகவினர் மதிய உணவு வழங்கினர்.
தொடர்ந்து பசுவந்தனையில் அதிமுக ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான காந்தி என்ற காமாட்சி தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர் .
மேலும் படிக்க | மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை - அண்ணாமலை பேச்சு!
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி,எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பால்ராஜ் மாவட்ட பிரதிநிதி மணி, கிளை செயலாளர்கள் மூர்த்தி, ஆனந்த், மாவட்ட எம்ஜிஆர் அணி முருகானந்தம், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரமசிவம், அவை தலைவர்கள் அண்ணாதுரை, துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காசிமேடு பவர் குப்பம் பகுதியில் வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. வட சென்னை வடகிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற கோலப்போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வீட்டு வாசல்களில் கோலமிட்டனர்.
மேலும் படிக்க | விபத்தில் சிக்கிய சென்னை மேயர் பிரியா! நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ