மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க தயார்: கோவையில் அதிமுக போஸ்டர்

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் என கோவையில் அம்மா பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 22, 2024, 12:27 PM IST
  • முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் கொண்டாட்டம்.
  • கோவையில் அம்மா பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
  • மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார்: போஸ்டர் வாசகம்
மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க தயார்: கோவையில் அதிமுக போஸ்டர் title=

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு யார் கூட்டணி வந்தாலும் கூட்டணியோடு இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் என கோவையில் அம்மா பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வருகின்ற 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டும், நாடாளுமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டியும் கூட்டணியை குறிப்பிட்டும் அம்மா பேரவை கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டர்களில், “76 வது பிறந்தநாள் காணும் புரட்சித்தலைவியை (ஜெயலலிதா) வணங்குகிறோம். தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார். எத்தனை கூட்டணியோடு யார் வந்தாலும், எங்களோடு யார் கூட்டணி வந்தாலும், கூட்டணியோடு இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார். நாளையும் நமதே! நாற்பதும் நமதே! ” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும் படிக்க | திமுகவின் 17 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கிறது - அண்ணாமலை கொடுத்த சிக்னல்

மேலும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, மற்றும் அம்மா பேரவை கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் புகைப்படங்களும் இவற்றில் இடம் பெற்றுள்ளன.

முன்னதாக,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காசிமேடு பவர் குப்பம் பகுதியில் வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. வட சென்னை வடகிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற கோலப்போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வீட்டு வாசல்களில் கோலமிட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா 

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா தமிழக மக்களால் ‘அம்மா’ என அன்பாக அழைப்படுகிறார். அம்மா என்ற சொல்லுக்கு ஏற்ப அவர் தாயுள்ளம் கொண்டு மக்களுக்கு பல நல்ல நலத் திட்டங்களைக் கொண்டு வந்தார். மக்களின் பசி போக்கிய ‘அம்மா உணவகம்’ அவற்றில் முக்கியமான ஒரு திட்டமாக பார்க்கப்படுகின்றது. தான் வாழ்ந்த காலத்தில் தமிழக அரசியலில் மறுக்க முடியாத மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் அவர். அவர் 1948, பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்தார். ஒவொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் அதிமுகவினர் அவரது பிறந்த நாளுக்காக பல வித நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.    

மேலும் படிக்க | தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் முழு பயண திட்டம்.! எங்கு செல்கிறார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News