தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது
கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் தலைமறைவாய் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் தலைமறைவாய் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் ஆவின் உள்ளிட்டவைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய உறுப்பினருமான ராஜேந்திர பாலாஜி தேடப்பட்டுவந்தார். கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் தமிழக போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைந்ததும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்த போலீசாரிடம் புகார்கள் வந்து குவிந்தன.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (Rajendra Balaji) மீது ரூ 3 கோடி வரை மோசடி புகார் அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் தலைமறைவானார்.
முன்னதாக, அவருடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட விக்னேஸ்வரன் மற்றும் ஏழுமலை ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கிருஷ்ணகிரி, வேலூர், பகுதியில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
Also Read | முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது
8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜேந்திரபாலாஜியை பல நாட்களாக தேடி வந்த போலீசார், தற்போது அவரை கைது செய்துள்ளனர். கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
மேலும், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாத வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் (Rajendra Balaji) 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததும், அதற்கு தமிழக அரசு சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | இறுகும் பிடி! ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR