RIP TO அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர் 104 வயதில் காலமானார்
ராமேஸ்வரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர் 104 வயதில் காலமானார்.
டாக்டர் அப்துல் கலாம் விஞ்ஞானியாகவும், நாட்டின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தவர். அவரது மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் ராமநாதபுரத்தில் காலமானார். டாக்டர் அப்துல் கலாம் விஞ்ஞானியாகவும், நாட்டின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தவர். அவரது மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் ராமநாதபுரத்தில் காலமானார்.
பழைய குடைகளை சரிசெய்யும் கடையை நடத்தி வந்தார் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர். 104 வயதான அவர் ராமநாதபுரத்தில் தனது வீட்டில் காலமானார். அன்னாருக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டார்.
Also Read | Commanders' Conference: கண்காட்சியில் ஆயுதப்படை ஆயுதங்களை பிரதமர் பார்வையிட்டார்
கலாமின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், அடிக்கடி சென்று மரியாதை செலுத்துவார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், சிறப்பு பிரார்த்தனைகளிலும் பங்கேற்று வந்தார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தனது மூத்த சகோதரரை தந்தையைப் போல் மதித்துவந்தார்.
இராமேஸ்வரத்தில் படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் - ஆஷியம்மா தம்பதியரின் ஐந்து மகன்களில் மூத்தவர் முகமது முத்து மீரான் லைப்பை மரைக்காயர். அப்துல் கலாம் பெற்றோருக்கு 5வது மகன். வறுமையான பின்னணியில் பிறந்து வளர்ந்த சகோதரர்கள் என்றுமே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | Women's Day 2021: வாழ்க்கையின் அஸ்திவாரமான பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR