முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி தில்லியில் கொலை
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம், தில்லியில் அவரின் வீட்டில் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம், தில்லியில் அவரின் வீட்டில் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் 1991 முதல் 1993 வரை பிரதமர் நரசிம்ராவ் அரசில் (PV. Narasimha Rao) சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக இருந்தார். அதன்பின் பாஜகவில் (BJP) சேர்ந்த குமாரமங்கலம், அடல்பிஹாரி வாஜ்பாய் அரசில் 1998 முதல் 2000 வரை மின்துறை அமைச்சராக இருந்தார். 2000வது ஆண்டு, ஆகஸ்ட் 23ம் தேதி காலமானார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள வசந்த்விஹார் பகுதியில் வசித்துவந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலத்தை (வயது67), நேற்று இரவு அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை நடந்த வீட்டில் போலஸீார் நடத்திய விசாரணையில், கிட்டி குமாரமங்கலம் நேற்று வீட்டில் இருந்தபோது இரவு 9மணி அளவில் வீட்டுக்கு சலவை செய்யும் தொழிலாளி மற்றும் அவருடம் வந்த இருவர்,
அவரின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக வீ்ட்டில் துணிகளை சலவை செய்து கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை நடந்த இடத்தில் பல சூட்கேஸ்கள் உடைத்து திறக்கப்பட்டிருந்தன என்பதால் கொள்ளை முயற்சி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் வீ்ட்டில் பணியாற்றிய சலவைத் தொழிலாளி ராஜு (வயது24) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இதில் மேலும் இருவருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களின் பெயரையும் தெரிவித்துள்ளார். அந்த இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ALSO READ | ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேருக்கு கிடுக்கிப்பிடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR