தமிழகத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் நான்காவது சிறப்பு ரயில், வேலூரில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுராவுக்கு திங்கள்கிழமை கட்ட்பாடி ரயில் சந்திப்பில் இருந்து புறப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ரயில் பயணத்தை அடுத்து இதுவரை தமிழகத்தில் இருந்து 4,360 பேர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


"இன்று, 58 குழந்தைகள் உட்பட 1,186 CMC நோயாளிகளுடன் 4-வது சிறப்பு ரயிலை (மேற்கு வங்கத்திற்கு முதல் ரயில்) அனுப்பியுள்ளோம்" என்று வேலூர் ஆட்சியர் ஏ சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.


ரயில் மெதுவாக பிளாட்பாரத்தை விட்டு வெளியேறும்போது இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிக்கித் தவித்த பயணிகள் நன்றியுடன் கைகளை அசைத்து பிரியா விடை கொடுத்தனர்.


ஆட்சியர் சண்முக சுந்தரம், SP பிரவேஷ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பயணிகளைக் கண்டறிவதில் அதிகாரிகள் குழுவை வழிநடத்தினர், அவர்களில் பெரும்பாலோர் வேலூரில் உள்ள CMC மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


ரயில் சந்தி வளாகமும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டன. டோக்கன்கள் வழங்கப்பட்ட அனைத்து பயணிகளும், மேடையில் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.


COVID-19 தாக்கத்தை அடுத்து மாநிலத்தில் முழு அடைப்பு அமுல் படுத்தப்பட்டது. முழு அடைப்பை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோயாளிகள் மற்றும் விருந்தினர் தொழிலாளர்கள் உட்பட சுமார் 11,000 பேர் சிக்கிக்கொண்டனர்.


மாவட்ட நிர்வாகம் அவர்கள் அனைவருக்கும் இலவச உணவை வழங்கியது, அதே நேரத்தில் லாட்ஜ்கள் / மாளிகைகளின் உரிமையாளர்களை அனுகி புலம்பெயர்ந்தோரின் இருப்பிடத்தை உறுதிசெய்தது. மற்றும் இவர்களிடம் இருந்து வாடகை 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டது.


இதுவரை, கட்பாடி சந்திப்பில் இருந்து ஜார்கண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு நான்கு சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. 


முதல் ரயில் மே 6-ஆம் தேதி ஜார்கண்டிற்கு 1140 நபர்களுடன் இயக்கப்பட்டது, இரண்டாவது 1142 நபர்களுடனும், மூன்றாவது பீகாரில் பாட்னாவுக்கு 1162 நபர்களுடன், நான்காவது மேற்கு வங்கத்தில் ஹவுராவுக்கு 1186 நபர்களுடன் இயக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஒவ்வொருவருக்கும் மாவட்ட நிர்வாகம் உணவுப் பொட்டலங்களையும் ஒரு பாட்டில் தண்ணீரையும் வழங்கியது.


தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் எட்டு ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் நான்கு வேலூரிலிருந்து வந்தவை என்று மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு ரயில்களில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிக்கித் தவிக்கும் மக்களின் பயணச் செலவுகளை தமிழகம் ஏற்கிறது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.