பிரதமர் மோடி, பாஜக பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடி, ரூ.2997யை இழந்த துணி வியாபாரி
பிரதமர் மோடி, பாஜக பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடியில் கோவில்பட்டியை சேர்த்த துணி வியாபாரி ரூ.2997யை இழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் வேல்பாண்டி. இவர் துணி வியாபாரம் மற்றும் ஸ்கீரின் பிரிண்டிங் தொழில் செய்து வருகிறது. இவர் தனது பணிகளைமுடித்து விட்டு இரவு நேரங்களில் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்ப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல பேஸ்புக் பார்த்து கொண்டு இருந்த போது, பாரத் ஜன் தன் யோஜனா மூலம் ஒவ்வொரு பொதுமக்களும், ரூ5000 அனைவருக்கும் இலவச கணக்கு, உங்கள் கணக்கில் வர கார்டை ஸ்கிராட்ச் செய்யவும் என்ற வார்த்தைகளுகளுடன் மேல் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம், டிஜிட்டல் இந்தியா மற்றும் இந்திய அரசின் சிங்க முக சின்னம் இடம் பெற்றது மட்டுமின்றி, நடுவில் புத்தாண்டில் தன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ரூ,5000 வரை பலன் கிடைக்கும் என்ற வாசகத்துடன் சிறிய தேசிய கொடியும், அதன் கீழ் மந்திர பெட்டியை தொடவும் என்ற வாசகத்துடன் பரிசு பெட்டி புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
மேலும் அந்த விளம்பரத்தின் இறுதியில் பாரதிய ஜன கட்சியின் தாமரைச்சின்னத்துடன் பாஜகவில் இருந்து இந்திய மக்கள் அனைவருக்கும் ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ 5000 வரை இலவசம் என்று இருந்துள்ளது.
இந்த விளம்பரத்தினை பார்த்த வேல்பாண்டி, ஆர்வமிகுதியினால் மந்திரபெட்டியை தொடவும் என்ற வாசகத்துடன் இருந்த பரிசு பெட்டியை தொட்டுவுள்ளது. தொட்டதும் தங்களுக்கு ஒரு ஓடிபி வரும் அதனை இதில் பதிவு செய்யவும் என்று தெரிவித்துள்ளது. அதன் படியே வேல்பாண்டி எண்ணிற்கு ஓ.டி.பி வந்துள்ளது. இதை வேல்பாண்டி அதில் பதிவு செய்துள்ளார்.
இதையெடுத்து உங்கள் வங்கி கணக்கினை பதிவு செய்யவும் என்று வந்துள்ளது, வேல்பாண்டி தனது இந்தியன் ஒவர்சீஸ் வங்கி கணக்கினை பதிவு செய்த அடுத்த சில நொடியில் அவரது வாங்கி கணக்கில் இருந்து 2997ரூபாய் பேடிஎம் மூலமாக எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர் தான் போலியான விளம்பரம், தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார்.
பின்னர் அந்த பக்கத்தினை பார்த்த போது அதில் கேள்வில் கேட்பதற்கும், விபரங்களை தெரிந்து கொள்ளவதற்கோ வசதி இல்லமால் இருந்துள்ளது. ஒரே ஒரு மெயில் ஐடி மட்டும் இருந்துள்ளது. என்ன செய்வதன்று தெரியாத வேல்பாண்டி இந்தியன் ஓவர்சிஸ் வங்கிற்கு சென்று புகாரும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேல்பாண்டி கூறுகையில்., எப்போதும் போல பேஸ்புக்கினை பார்த்து கொண்டு இருந்த போது பிரதமர் மோடி புகைப்படம், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் ஆகியவை இடம் பெற்று இருந்து ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று இருந்ததால் உண்மை என்ற நம்பி அந்த விளம்பரத்தில் இருந்து மந்திர பெட்டியை தொட்டதும், ஓடிபி மற்றும் வங்கி கணக்கினை கேட்டதும், இதனை பதிவு செய்தததும் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2997 பேடிஎம் மூலமாக எடுக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டது. தெரியவந்தது. என்னைப் போன்று பலரும் இது போன்று ஏமாற்றப்பட்டு இருக்கலாம்.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், தனது திரும்ப பெற்று தர வேண்டும், தனது மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. திருமணத்திற்காக வாங்கி சில பொருள்களை வாங்கி இருந்ததாகவும், அதற்காக கொடுப்பதற்கான பணத்தினை வைத்திருந்த நிலையில் தான் பணத்தினை இழந்து இருப்பதாகவும், வங்கி மேலாளரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், தற்போது அது போன்று விளம்பரம் வந்ததாகவும். 22000 ரூபாய் என்று அதில் இடம் பெற்று இருந்ததாகவும், என்னைப்போல் யாரூம் ஏமாறமால் இருக்க வேண்டும் என்றால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது! அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் மிம்மிக்ரி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ