நாகர்கோவிலைச் சேர்ந்த அமுதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆண்டு பயின்றுவருகிறார். கடந்த 6ஆம் தேதி முதல் எனது மகளைக் காணவில்லை. இது தொடர்பாக விசாரித்தபோது, எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பிரீ பையர் விளையாட்டு விளையாடியதாகவும் அதில், ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாப்ரின் என்பவரோடு சென்றிருக்கலாம்வும் என தெரிவித்தனர். வளரும் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவே, எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மனுவானது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்பது இளைய தலைமுறைக்கு சோதனை காலகட்டமாகவே அமைந்தது. ஆன்லைன் வகுப்பு நடைபெற்றபொழுது இளைய தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியுள்ளனர். இளம் பருவத்தினர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி தனி உலகத்தில் வாழ்ந்துவருகின்றனர் நிஜ வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர். தற்போதுள்ள  தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டேதான் இருக்கிறது. இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது.



இப்போதுள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகள் என அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதே இல்லை.ப்ரீ பையர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பதுபோல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.தற்போதைய சூழலில் அவரவரே அவரவரைபாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என கருத்து தெரிவித்தனர்.


மேலும், இந்த வழக்கில் காணாமல் போன பெண் பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால் பெற்றோர்கள் தனது மகளை அழைத்துச் செல்லலாம், பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படும் வாலிபர் மீண்டும் பெண்ணிற்கு எந்த விதமான இடையூறும் செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.


மேலும் படிக்க | காந்தி ஜெயந்தியை கொண்டாட ஆர்எஸ்எஸுக்கு உரிமை உண்டு - ஆளுநர் தமிழிசை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ