890 மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் உள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையங்களில் 200 படுக்கைகள் காலியாக உள்ளன என்றும் சென்னையில் கூடுதலாக இன்னும் சில சித்தா சிகிச்சை மையங்களை அமைக்க நடாவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை: இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளது. பல இடங்களில் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டாலும், இன்னும் பல பகுதிகளில் தொற்றின் வீரியம் அதிகமாகத்தான் உள்ளது.
தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு தினமும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று படவலைத் தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கொரோனா சிகிச்சை மையங்களும் அதிகமாகத் தேவைப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னை கிங் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 890 மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா (Coronavirus) சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், சென்னையில் உள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையங்களில் 200 படுக்கைகள் காலியாக உள்ளன என்று கூறினார். மேலும், சென்னையில் கூடுதலாக இன்னும் சில சித்தா சிகிச்சை மையங்களையும் அமைக்க நடாவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ALSO READ: முழு ஊரடங்கை கடைபிடித்து COVID19 பரவல் சங்கிலியை உடைப்போம்: முதல்வர் ஸ்டாலின்
கொரோனா சிகிச்சை குறித்து பேசிய அமைச்சர், கொரோனா பரிசோதனை செய்து, பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்ததும் மருத்துவமனைகளுக்கு மக்கள் படையெடுக்கத் தேவையில்லை என்று கூறினார். பாசிடிவ் என பரிசோதனை முடிவு வந்ததும், முதலில் அருகில் உள்ள ஸ்கிரீனிங் சென்டருக்கு சென்று, உடல் நலம் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளை முதலில் கேட்டறிய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
உடல்நிலை தீவிரமாக இல்லாதவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டு தனிமையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார். அறிகுறிகள் அதிகமாகி மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில், நோயாளிகள் உடனடியாக தாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் எந்த ஒரு சமயத்திலும் மனதளவில் பயம் கொள்ளக்கூடாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மக்கள் சுதாரிப்பாக செயல்பட்டால் கொரோனாவின் பிடியில் இருந்து எளிதில் விடுபட்டு விடலாம் என்று கூறினார் அமைச்சர் மா. சுப்பிரமணியம். எனினும், கொரோனா பாசிட்டிவ் என்று வந்தும் வீட்டு தனிமையில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் மருத்துவரிடம் உரிய அறிவுறைகளை எடுத்துக்கொண்டு சிகிச்சையை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவர் கூறுவது போல் செய்வதே வீட்டு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
அரசின் காப்பீட்டு திட்டத்தைப் பற்றி கூறிய அமைச்சர், தமிழகத்தில் உள்ள 890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டு திட்டத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த வகையில், அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு வெளியே பலகை வைத்து மக்களுக்கு அதை தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது தொடர்பாக வரும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.
தமிழகத்தில் (Tamil Nadu) நேற்று மட்டும் 35,483 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
ALSO READ: Tamil Nadu: இன்று முதல் மாத இறுதி வரை தமிழகத்தில் அனுமதி எதற்கு? தடையில்லா சேவை எவை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR