Tamil Nadu: இன்று முதல் மாத இறுதி வரை தமிழகத்தில் அனுமதி எதற்கு? தடையில்லா சேவை எவை?

 தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாநிலத்தில் கொரோனா தொற்றின்தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 24, 2021, 07:37 AM IST
  • இன்று முதல் மாத இறுதி வரை தமிழகத்தில் அனுமதி எதற்கு?
  • தடையில்லா சேவை எவை?
  • லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படுமா?
Tamil Nadu: இன்று முதல் மாத இறுதி வரை தமிழகத்தில் அனுமதி எதற்கு? தடையில்லா சேவை எவை? title=

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாநிலத்தில் கொரோனா தொற்றின்தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.  

நிலைமையை கருத்தில் கொண்டு, மருத்துவ நிபுணர்கள், அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் தமிழக முதல்வர் நடத்திய கலந்தாலோசனைக்கு பிறகு, மாநிலத்தில் 24ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது. 

ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்று முதல் அமலுக்கு வரும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதியில் பல மாற்றங்கள் உள்ளன.

Also Read | தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு: கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

நேற்று வரை மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் செயல்பட அனுமதி இருந்தது. ஆனால் இன்று முதல் பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள்,  மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தோட்டக்கலைத் துறை மூலமாக சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களை மக்களுக்கு வழங்கும். ஏனெனில் வியாபாரிகள் முகக்கவசங்களை முறையாக போடவில்லை, மக்கள் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை என்பதால் கொரோனா பாதிப்பு அதிகமாகிறது. எனவே காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் இயங்காது.

வீட்டில் இருந்து பணிபுரியும் துறைகள்:

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை. இந்த நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட நேரம் மட்டுமே செயல்படும் கடைகள்:

  • உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதி.
  • ஸ்விக்கி, ஜொமோட்டோ மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி 
  • வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி 
  • அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.

 அனுமதி இல்லை:

  • மால்கள் திறக்க அனுமதி கிடையாது.
  • பொது நிகழ்ச்சிகள், சினிமா அரங்குகள் திறக்க அனுமதி கிடையாது
  • திருமணம், சடங்குகள், கோவில்கள், விழாக்கள் எதற்கும் அனுமதி கிடையாது

ALSO READ: முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை: ஊரடங்கை நீட்டிக்க கட்சிகள், நிபுணர்கள் பரிந்துரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News