எதிர் கோட்டை கிராமத்தில் நண்பனின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று நண்பர்கள் சீராக வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எதிர்க்கோட்டையை சேர்ந்த  சுப்புராஜ்- முத்துலட்சுமி தம்பதியின் மகனான நவநீதன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அனிதா என்பவருக்கும் இன்று எதிர்க்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் 25 ஆயிரம் மதிப்பிலான 200-க்கு மேற்பட்ட புத்தகங்களை  தாம்புல தட்டில் வைத்து சீர் வரிசை போல ஊர்வலமாக கொண்டு வந்து புதுமண தம்பதியினரிடம் வழங்கினார்கள்.


மேலும் படிக்க | இறந்த தம்பியின் உருவ சிலையின் மடியில் குழந்தைகளுக்கு காதுகுத்திய அக்கா!



 இந்த நிலையில் புத்தகங்களை சீர் வரிசையாக வழங்கியதை அந்த பகுதி மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்தனர். தற்போது பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை செல்போனில்  மூழ்கி இருப்பதால் அவர்களிடையே புத்தக வாசிப்பை பரவலாக்குவதன்  மூலம் அரசியல் சிந்தனைகளையும் எடுத்துரைக்க முடியும் என மணமக்கள் தெரிவித்தனர். 


மேலும் படிக்க | இது மட்டன் சூப் இல்லை மட்டமான சூப்..! இந்த வீடியோவை பார்த்தால் இனி சூப் குடிக்கவே மாட்டீங்க! வைரல் வீடியோ!



திருமணத்துக்கு பரிசு என தேவையற்ற பல அலங்கார அழகு பொருட்களை வழங்கும் நண்பர்களுக்கு மத்தியில், 200 புத்தகங்கள் பரிசாக வழங்கிய நண்பர்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். செல்போன்களில் மூழ்கி உறவுகளை மறக்கும் இந்த காலத்தில், புத்தகங்கள் மூலம் உறவுகளை வலுவாக்கியுள்ளனர் இந்த நண்பர்கள். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR