திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி - பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்தார், அப்போது அவருக்கு வயது 21. அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ, மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் இன்று நடைபெற்றது. பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய சிலிக்கன் உருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது.
மேலும் படிக்க | பிறந்தநாளுக்கு அண்ணன் வராததால் மாணவி தற்கொலை!
இதற்கு முன்னதாக தாய்மாமன் சிலிக்கன் சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபம் வந்தது. அதன்பின் அவரது சிலையின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடைபெற்றது. இதுபற்றி பாண்டி துறையின் தாய் பசுங்கிளி கூறும்போது, அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது பாண்டி துறையில் நீண்ட நாள் கனவு. இதனை அடிக்கடி கூறி வந்தார், இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விபத்து ஒன்றில் இறந்து போனார்.
இதில் பாண்டித்துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெங்களூருவில் சிலை செய்பவரிடம் பாண்டித்துரை அச்சு அசல் உருவம் போலவே தத்துரூபமாக இருக்கும்படி சிலை செய்யச்சொல்லி இங்கு கொண்டு வந்தோம். இதன்மூலம் என்னுடைய மகனின் விருப்பம் நிறைவேறியது, பேரக் குழந்தைகளுக்கும் தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்தும் வாய்ப்பு கிடைத்தது, என் மகளின் ஆசையும் நிறைவேறியது என்றார். மேலும் இந்த சிலை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் செலவானது என்றும் கூறினார். ஒட்டன்சத்திரத்தில் இதுபோன்ற வினோதமான முறையில் சிலையில் அமரவைத்து குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது அப்பகுதி மக்களிடையேயும் உறவினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | தாயை இழந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புரட்சிப்பெண்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR