ஜூன் முதல் ஏழு மாதங்களுக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்கள், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்


இதையடுத்து, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்ககப்பட்டது. இதன்படி, ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்த பகுதிகளுக்கு மட்டும், கலெக்டர்கள் அனுமதி அளித்து வருகின்றனர்.


கடந்த காலத்தில் ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடந்தது. இதன்படி, அனுமதி கேட்டு, கிராம மக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி உள்ளது என அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், கிராம மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.


ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி முதல் மே வரை மட்டுமே அனுமதி. அதன் பிறகு விண்ணப்பம் அளித்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.