21:07 15-11-2018
கடுமையான சுழல் புயல் கஜா கரையைக் கடக்க உள்ளதால், புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20:45 15-11-2018
இரவு 10 மணிக்கு பிறகு கரையை கடக்கும் கஜா புயல் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



20:23 15-11-2018
தற்போது கடுமையான சுழல் புயல் கஜா நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 125 கிமீ தொலைவில் உள்ளது. இதன் வேகம் 90 கிமீ முதல் 110 கிமீ வேகத்தில் உள்ளது. இந்த வேகம் 110 கிமீ மாற வாய்ப்பு உள்ளது.
 



 



20:03 15-11-2018
கஜா புயல் முன்னெச்சரிக்கை குறித்து அமைச்ச ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி



19:55 15-11-2018
ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 12,500 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.



19:53 15-11-2018
1800 220 161 என்ற இலவச அழைப்பு எண்ணின் மூலம் வானிலை தகவல் தெரிந்துக்கொள்ளலாம்.



19:47 15-11-2018
நாகை மாவட்டத்தை கஜா புயல்​ நெருக்கி வருவதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தம்



19:41 15-11-2018
கஜா புயல்​ கரையை கடக்கும் வரை புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.



19:39 15-11-2018
கஜா புயல் காரணமாக நவம்பர் 16 ஆம் தேதி நடக்க இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் நவம்பர் 22 அம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.




19:31 15-11-2018
இரவு 10 மணி முதல் 11 வரை புயலின் வேகம் அதிகரித்து நாகையில் கரையை கடக்க துவங்கும் என ன்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



4:11 AM - 15 Nov 2018


கஜா புயல் நாகையின் வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கீ.மீ வரை காற்று வீசும் சிலநேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! 



3:48 AM - 15 Nov 2018


கஜா புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அறிவிப்பு....



3:02 AM - 15 Nov 2018


சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நாகைக்கு வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. 



2:49 AM - 15 Nov 2018 


கஜா புயல் நாகையின் வடகிழக்கே 187 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல். 



1:39 AM - 15 Nov 2018


தமிழகத்தை நோக்கி கஜா புயல் 17 கி.மீ. முதல் 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. பாம்பன் - கடலூர் இடையே இன்று இரவு 8 மணி அல்லது 11 மணி அளவில் கரையை கடக்கலாம். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80  கி.மீ. முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் கே.ஜே. ரமேஷ் தெரிவித்துள்ளார். 


மேலும், புயல் கரையை கடக்க குறைந்தபட்சம் 4 மணி நேரமாகும்; புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 



12:54 AM - 15 Nov 2018


புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். 



12:53 AM - 15 Nov 2018


கஜா புயல் மணிக்கு 22 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தகவல் 



12:29 AM - 15 Nov 2018


  • கஜா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் துறைமுகத்தில் 9-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

  • கஜா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...



11:35 PM - 14 Nov 2018


கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தல்.



நாகை மற்றும் சென்னையில் இருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயலானது, இன்று மாலை அல்லது இரவில் நாகை அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...!


இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று காலை 8.30 மணிக்கு வெளியிட்டுள்ல வானிலை அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் கஜா புயலானது, மேற்கு-தென்மேற்கு திசையில் மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, அதிகாலை 5.30 மணிக்கு நாகையில் இருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, முற்பகல் 11.30 மணிவாக்கில் தீவிர புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அது மேலும் நகர்ந்து மீண்டும் மாலை 5.30 மணிவாக்கில் வலுக்குறைந்து புயலாக மாறும் எனவும், பாம்பன்-கடலூர் இடையே, நாகை அருகே இன்று மாலை அல்லது இரவில் புயலாக கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், காற்றின் வேகம் 100 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கரையைக் கடந்த பிறகு, 17ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நிலை கொள்ளும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கஜா புயலால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிககன மழை பெய்யும் என்றும், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில், ஆங்காங்கே, 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவில் அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம், புதுச்சேரியில் நாளை பெரும்பாலான இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் குறிப்பாக உள்தமிழக பகுதிகளில் மிக கனமழையும் பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.