நடிகர் ரஜினிகாந்த் வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்துடன் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இவர் தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும் சிறந்த பேச்சாளரும் ஆவார். இவருடைய திடீர் சந்திப்பு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை உள்ள ரஜினிகாந்த்தின் போயஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று மதியம் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.


தமிழருவி மணியனுடன் ஏறப்பட்ட சந்திப்பு ரஜினி தனது ரசிகர்களுடான சந்திப்பில் அரசியல் கட்சி பற்றி அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்பட்டுதியுள்ளது. என்னென்றால், தமிழருவி!! மணியன் ஏற்கனவே ரஜினி ரசிகர்களை கூட்டி மாநாடு நடத்தி அதிர வைத்தவர் ஆவர். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து கூறி வருபவரும் இவரே.


மேலும், ஏற்கனவே ரசிகர்கள் சந்திப்பில் போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தது,குறிபிடத்தக்கது.