#காந்திஜெயந்தி150: தேசத்தந்தைக்கு மரியாதை செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின்
காந்தியையும், அவரின் யோசனையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்.
சென்னை: இன்று நாடு முழுவதும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் இறந்தும் 70 ஆண்டுகள் கடந்து விட்டது. நாட்டில் நடக்கும் அரசியல் சூழல்களை நோக்கும் போது, அவரின் கனவுகள் நிறைவேறி உள்ளதா? என பார்க்க வேண்டியது கட்டாயம். இன்று அவரின் பிறந்தநாள், நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் அவரை வணங்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில் காந்திஜியை குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காந்தியையும், அவரின் யோசனையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அவர் கூறியது,
தேசத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதில் நான் சக இந்தியர்களுடன் இணைகிறேன்
அகிம்சை, இரக்கம், கருத்து வேறுபாடு மற்றும் துன்பங்களை எதிர்கொள்ளும்போது தைரியமாக இருக்க வேண்டும் என்று அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார்.
முன்னெப்போதையும் விட, தற்போது அவரையும், இந்தியாவைப் பற்றிய அவரது யோசனையையும் இன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உண்மை எப்போதும் வெற்றிபெறட்டும். #காந்திஜெயந்தி150