பிரதம மந்திரி வீட்டு வசதி - நகர்ப்புறம் திட்டத்தில் சென்னையில் ரூ 116 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 1,152 வீடுகள் திறப்பு, மதுரை - தேனி இடையே ரூ 500 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 75 கி.மீ ரயில் பாதை திட்டம் தொடக்கம்,சென்னை - பெங்களூரு இடையே 262 கி.மீ தூரத்துக்கு 14, 870 கோடி ரூபாயில் அதிவிரைவு சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது வருகையையொட்டி பாஜக சார்பில் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. தனி விமானம் மூலம் சென்னை வந்த அவரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.



இதற்கிடையே மோடியின் வருகைக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்தது. இந்த முறையும் வழக்கம்போல் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. அதேசமயம் மோடியை வரவேற்று பாஜகவினரும் ட்விட்டரில் பதிவிட்டனர்.


மேலும் படிக்க | பிரதமருக்கு காவி குடை பிடிக்கும் திமுக?


அந்தவகையில் இசையமைப்பாளரும், பாஜகவைச் சேர்ந்தவருமான கங்கை அமரன் மோடியை வரவேற்று ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நம் இந்தியத் தந்தையும் தாயுமானவரும் ஆன மதிப்பில் உயர் பாரதப்பிதமரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.


 



கங்கை அமரனின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவுக்கு தந்தை காந்திதானே எப்போது மோடி அந்த ஸ்தானத்திற்கு வந்தார். இந்திய தந்தை யார் என்பதில் பாவம் கங்கை அமரனே கன்ஃப்யூஸ் ஆகிவிட்டார் என கலாய்த்து கமெண்ட் செய்துவருகின்றனர்.



முன்னதாக மோடியை அம்பேத்கரோடு இளையராஜா ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் கங்கை அமரன் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதும், அதற்கு அவர் கடுமையான கண்டனங்களை சம்பாதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 29c-ம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR