கோவையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து சாக்லேட் வடிவில் கஞ்சா
கஞ்சாவை பொட்டலாமாக விற்பனை செய்தால் காவல் துறையினரிடம் மாட்டிக்கொள்வோம் என நினைத்து அதனை சாக்லெட் வடிவில் விற்க ஆரம்பித்திருக்கின்றனர் கஞ்சா வியாபாரிகள்.
கண்ணை நம்பாதே ... உன்னை ஏமாற்றும் ... நீ காணும் தோற்றம் ... உண்மை இல்லாதது என்ற பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ கோயமுத்தூர் கஞ்சா வியாபரிகளுக்கு கன கச்சிதமாக பொருந்தும். ஆம் கஞ்சாவை பொட்டலாமாக விற்பனை செய்தால் காவல் துறையினரிடம் மாட்டிக்கொள்வோம் என நினைத்து அதனை சாக்லெட் வடிவில் விற்க ஆரம்பித்திருக்கின்றனர் கஞ்சா வியாபாரிகள்.
கஞ்சாவை தூளாக்கி சாக்லெட் வடிவில் கஞ்சா உருண்டை முதலில் தயார் செய்கின்றனர். பின்பு அந்த உருண்டையை சிறு சிறு சாக்லெட் பைக்குள் அடைத்து கஞ்சா சாக்லெட்டாக மாற்றுகின்றனர். அதனை டீக்கடை, பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் வைத்து நூதன முறையில் கஞ்சாவை வியாபாரிகள் விற்று வருகின்றனர். இது குறித்து போலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்வப்போது அதிரடி சோதனையில் காவல்துறையினரும் ஈடுபடுகின்றனர். கஞ்சா ஆபரேசன் 2.ஓ என்ற போலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நாள்தோறூம் கஞ்சா வியாபாரிகள் கைதாகி வருகின்றனர். கோவை மாநகரில் மட்டும் வாரத்துக்கு குறைந்தபட்சம் 10 கஞ்சா வியாபாரிகளாவது கைதாகின்றனர். அவர்களிடம் நடத்தப்படுகின்ற விசாரணையில் கூட்டாளிகளும் கைதாகின்றனர். கோவையில் கஞ்சா விற்பவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையினால் கஞ்சா வியாபாரிகளின் கைது முன்பை விட அதிகரித்திருக்கின்றன.
மேலும் படிக்க: Election: இந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம்?
இந்த நிலையில் ரத்னபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கஸ்தூரி தலைமையிலான போலிஸ் அதிரடி ரெயிடில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது கண்ணப்ப நகர் சங்கனூர் பகுதியில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை காவலர்கள் தணிக்கை செய்திருக்கின்றனர். காவலர்களின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அந்த நபர் வந்த வாகனத்தை காவல் துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டுகளை பார்த்திருக்கின்றனர். சாக்லெட்டை ஏன் மறைத்து வைக்க வேண்டும் என சந்தேகப்பட்ட காவல் துறையினர் உடனடியாக சாக்லெட் பொட்டலங்களை பிரித்து பார்த்திருக்கின்றனர். அந்த சாக்லெட்டை பார்த்து அதிர்ந்த காவலர்கள் குழுந்தைகள் சாப்பிடும் சாக்லெட் அல்ல அது போதை பிரியர்களின் பிரியமான கஞ்சா சாக்லெட் என்பதனை அறிந்திருக்கின்றனர். உடனடியாக அந்த நபரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
விசாரணையில் கஞ்சா சாக்லெட் வைத்திருந்த நபர் பாலாஜி என்றும் காய் கறி மார்கெட்டில் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. காவல்துறை அதிகாரிகளின் தொடர் விசாரணையில் பாலாஜி சாதாரன கஞ்சா விற்பனையாளர் என்பதும் கஞ்சா சாக்லெட் விற்பனை குழுவின் தலைவன் சுரேஷ் என்பதும் தெரியவந்தன. இந்த நிலையில் கஞ்சா சாக்லெட் விற்ப்பனை குழுவின் தலைவன் சுரேஷ் உட்பட கூட்டாளிகள் 15 பேருக்கு ரத்னபுரி போலிஸ் வலை விரித்திருக்கின்றனர். உத்திரபிரதேசத்திலிருந்து கஞ்சா சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு கோயமுத்தூருக்கு ரெயில் மற்றும் லாரிகளில் கடத்தி வருகின்றனர். கஞ்சா சாக்லெட்டை விரும்புவோருக்கு அவர்கள் கேட்கின்ற இடங்களுக்கே சென்று தந்து வருகின்றனர்.
இதற்கு முன் ஆர்.எஸ் புரம் காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி தலைமையிலான காவலர்கள் வடமாநில இளைஞர் கேத்தன் குமார் என்பவனை கைது செய்து கிலோ கணக்கில் கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. வடமாநில தொழிலாளர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களே கஞ்சா சாக்லெட் வியாபாரிகளின் இலக்காக இருக்கிறது.கஞ்சா போன்ற போதை பொருள் பயன்பாடு உடல் நலத்துக்கு தீங்கு என்பதனை கடந்து வழிப்பறி கொலை கொள்ளை சம்பவங்களுக்கும் ஊந்துகோலாக இருப்பதனால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்யும் போதை பொருள் வியாபாரிகளின் கொட்டம் அடக்க போலிஸ் அதிரடியினை தொடர்வார்களென தெரிகின்றது. இந்த நிலையில் போதை பிரியர்களுக்கு போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்ப்படுகின்ற உடல் மற்றும் சமூக தீங்கை விளக்கும் விதமாக விழிப்புணர்வும் அவசியமாகியிருக்கின்றன.
மேலும் படிக்க: இந்தியாவில் இந்த சர்வாதிகாரத்துக்கு 'உண்மை' தான் முடிவு கட்டும் -ராகுல் காந்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ