முழு அடைப்பு முடியும் வரை நகரம் முழுவதும் உள்ள அம்மா கேன்டீன்கள் இலவசமாக உணவை வழங்கும் என்று கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வியாழக்கிழமை அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்., "நிறைய இடங்களில் வைரஸைக் காட்டிலும் பசி ஒரு பெரிய பிரச்சினையாகும், அதனால்தான் நாங்கள் இந்த அறிவிப்பைக் கொண்டு வந்தோம். மேலும், அனைவருக்கும் இது கிடைக்கச் செய்தோம், ஏனெனில் வேலை செய்யும் பலருக்கும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. நகரத்தில் யாரும் பசியுடன் இருக்க வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்"என்று கூறினார்.


READ | கொரோனா முழு அடைப்பிற்கு மத்தியில் சேலம் அம்மா உணவகத்தில் இலவச உணவு?


நகரத்தில் மொத்தம் 407 அம்மா கேன்டீன்கள் உள்ளன, இந்த உணவகங்களை நடத்துவதற்கான செலவு ஒரு நாளைக்கு ரூ.17 லட்சம் ஆகும். இந்நிலையில் மே 3 வரை பொதுமக்களுக்கு உணவளிக்க போதுமான நன்கொடைகள் உள்ளன என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


"நாங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுயாதீன பரோபகாரர்கள் மற்றும் நிறுவன சமூக பொறுப்பு நிதிகள் ஆகியவற்றிலிருந்து நன்கொடைகளைப் பெறுகிறோம். இதற்காக நன்கொடை வழங்கவும் மக்களை வரவேற்கிறோம்" என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.


உணவிற்காக சராசரியாக 250 வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு அம்மா கேண்டீனில் தினம் வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


கேன்டீன்கள் காலை உணவுக்கு இட்லி மற்றும் பொங்கல், கலவை சாதம் (எலுமிச்சை சாதம் / கறிவேப்பிலை சாதம்) மற்றும் மதிய உணவுக்கு சாம்பார் மற்றும் சப்பாத்தி மற்றும் இரவு உணவிற்கு பருப்பு குழும்பு ஆகியவை தற்போது வழங்குகிறது.


READ | கர்நாடகவில் ‘அம்மா உணவகம்’ போல் ‘நம்ம உணவகம்’...


நகரக் கழகத்தின் இந்த நடவடிக்கை நகரத்தில் பலரால் பாராட்டப்பட்டது. "உணவு விநியோகத்தில் நிறைய கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இந்த நடவடிக்கை நகரத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு அளிக்கும் வரமாய் அமைந்துள்ளது.


முன்னதாக, கோயம்புத்தூரில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும், உணவு வழங்குவதற்கான செலவை அதிமுக மாவட்ட கட்சி பிரிவு ஏற்கும் என்று சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாக அமைச்சர் SP வேலுமணி தெரிவித்திருந்தார். அதேப்போல் சேலத்தில் உள்ள அம்மா உணவகங்களிலும் அதிமுக கட்சியின் சார்பில் இலவச உணவு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.