தமிழக எல்லையோரம் கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த சாரோன்ராஜ் என்ற மாணவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதியாண்டு படித்துவருகிறார். இவர் வீட்டிலிருந்து தினந்தோறும் கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கிரிஷ்மாவும் அதே பேருந்து பயணம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகிய நிலையில் அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு திருமணம் செய்து வைப்பதற்காக ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி  கிரிஷ்மா அழைத்ததை தொடர்ந்து தனது காதலியின் வீட்டிற்கு சாரோன் ராஜ் சென்றுள்ளார். அப்போது கிரிஷ்மா சாரொன்னுக்கு ஜூஸ் கொடுத்திருக்கிறார்.  ஜூஸ் குடித்த பின்பு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது போன்று சாரோன் ராஜ் உணர்ந்த சூழலில் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். இருப்பினும் சில நாட்களில் அவரது உடலின் சில பாகங்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில் உடல்நிலை மிகவும் மோசமாகி நான்கு நாட்களுக்கு முன்  உயிரிழந்தார்.  


மேலும் படிக்க | Gujarat bridge collapse : விபத்துக்கு காரணம் இளைஞர்களா? - வைராலகும் வீடியோ... முழு விவரம்


இளம் பெண் அளித்த ஜூஸ் குடித்ததால் தனது மகனுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதாக சாரோன் ராஜின் தந்தை ஜெயராஜ் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.


அதாவது அந்தப் பெண்ணின் ஜாதகப்படி முதல் கணவன் உயிரிழப்பான் அதன் பிறகு இரண்டாவது கணவருடன் கிரிஷ்மா சந்தோஷமாக இருப்பார் என ஜோதிடர் கூறியிருக்கிறார். எனவே சாரோன்ராஜை காதலித்து கொலை செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து ஆடம்பர வாழ்க்கை அந்தப் பெண்ணும், குடும்பத்தினரும் திட்டமிட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


மேலும் படிக்க | ஆண்டிமடம் மார்வாடி கடையில் ஒன்றரை கிலோ நகைகள் கொள்ளை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ