உலகம் நவீன நாகரீகத்தில் தளைத்தோங்கி விட்டது. மனிதர்களின் அறிவு கண்கள் 7ஆம் நிலையையும் தாண்டி சென்றுவிட்டது. இந்தியா விண்ணில் செயற்கைகோளை ஏவுகிறது. ஏராளமான மக்கள் படித்து அறிவுசார் சமூகமாக மாறியுள்ளனர். இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருக்கும் இதே காலகட்டத்தில்தான் தீட்டு என்ற வாரத்தையும் திகைப்பூட்டுகிறது. வேறு எங்கும் இல்லை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கொடநாடு அருகே உள்ளது பாமுடி எனும் கிராமம். பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியான இங்குதான் உள்ளது தீட்டு வீதி. பழங்குடி மக்கள் வாழும் இந்த பகுதியில் பல வருடங்களாக ஒரு திகிலூட்டும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது வயதிற்கு வந்த சிறுமிகள் மாதவிடாயின்போது தங்கள் வீட்டில் இருக்கக்கூடாதாம். அதை பெற்றோர்களே தீட்டு எனக்கூறி அங்குள்ள எஸ்டேட் பகுதியின் நடுக்காட்டில் இரு கூரை வீடுகள் உள்ளன. அந்த சிறுமிகளை இரவு பகல் பாராமல் அங்கு கொண்டு விட்டு விடுவார்களாம். யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகம் உலா வரும் அந்த பகுதியில் சிறுமிகள் தன்னந்தனிமையில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 7 நாட்கள் நடுக்காட்டில் கூரை வீட்டில் விடப்படும் சிறுமிகள், முதல் 5 நாட்கள் பெரிய வீட்டிலும் மீதமுள்ள 2 நாட்கள் சின்ன வீட்டிலும் இருக்க வேண்டுமாம். 


அவர்களுக்கு தேவையான உணவை அவர்களே சமைத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். இரவில் தனியாகத்தான் உறங்க வேண்டும். அவர்களின் உடை, போர்வை உள்ளிட்டவைகளை 7 நாட்கள் முடிந்து துவைத்து காயவைத்து குளித்துவிட்டுதான் வீட்டிற்கு வரவேண்டுமாம். இந்த 7 நாட்கள் காட்டு வீட்டுக்குள் தனித்து இருக்கும் அந்த சிறுமிகளை காட்டு விலங்குகள் இரவில் வந்து அடிக்கடி அச்சுறுத்துவது உண்டு எனவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மவுசா.! கோடிகளை கொடுத்து வாங்க கியூ


இது குறித்து அந்த ஊரை சேர்ந்த சிறுமிகளுக்கே பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை எனக்கூறப்படுகிறது. காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை அவர்களும் உண்மை என நம்பி அதை ஏற்று வாழ ஆரம்பித்துவிட்டார்கள்  என்பதுதான் கொடுமையிலும், கொடுமை. 


பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் மாதவிடாய் வந்த பெண்களை தங்கள் வீட்டிலேயே தனியாக ஒரு அரையில் தீட்டு எனக்கூறி வைப்பது வழக்கம்தான். இது குறித்து முதியவர்கள் சிலரிடம் கேட்டபோது, அந்த நாட்களில் பெண்கள் மிகவும் சோர்வுடன் இருப்பார்கள், அவர்களுக்கு ஓய்வு தேவை, அது மட்டுமின்றி அந்த நேரங்களில் வேலை செய்வதை தவிற்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்த முறை கடைபிடிக்கப்பட்டது எனவும், ஆனால் அது காலப்போக்கில் பெண்கள் உடலில் இருந்து வெளியேறும் ரத்தம் தீட்டு எனக்கூறி அவர்களை ஓரம் கட்டும் நிலை வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்கள். 



இந்த அவலம் இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெண்களை மாதவிடாய் காலத்தில் தீட்டு எனக்கூறி தனிமைப் படுத்தும் நிலை தொடர்கிறது. இது குறித்து மனநல ஆலோசகரிடம் கேட்டபோது, சிறுமிகள் மாதவிடாய் நாட்களில் மிகவும் சோர்வுடனும், வலியுடனும் காணப்படுவார்கள். அவர்களுக்கு அப்போது தேவைப்படுவது ஆதரவும், அரவனைப்பும், சத்தான உணவும்தானே தவிற தனிமை அல்ல எனக் கூறுகின்றனர். 


ஏதோ ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் அல்ல, இன்றும் இப்படியொரு சம்பவம் இங்கு நடக்கிறது என்பதை கேள்விப்படும் போது திக் என்றுதான் இருக்கிறது. பெண்களை ஆண்களுக்கு நிகராக சரி சமமாக பார்க்க வேண்டும்மென வீர வசனம் பேசும் நமக்கு மத்தியில்தான் இதுபோன்ற அவலங்களும் அரங்கேறி வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | இந்தியாவையே நடுநடுங்க வைத்த தக்கர் கொள்ளையர்கள்.! வரலாற்றின் பின்னணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR