அனிதா மரணத்திற்கு நீதி கொடு: இளைஞர் போராட்டம்!
அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் புரட்சி மாணவர் மற்றும் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் புரட்சி மாணவர் மற்றும் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12 ஆம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்தால் இவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அனித்த இன்று தனது வீட்டினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.